முன்னாள் ஜனாதிபதியை தேடி வரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர்




வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அறிவித்துள்ளனர். 

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த வாக்குமூலம் பெறப்பட உள்ளது. 

ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.