நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களது வாடிகளுக்கு , தீ வைப்பு




தவசீலன், பிரதீபன்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடி அமைச்சர் வருகை தந்து, மீனவர்களது பிரச்சினைகளை தீர்த்து சென்ற மறுநாளான நேற்று (13) இரவு முல்லைத்தீவு நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களது வாடிகளுக்கு இனம்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது 

குறிப்பாக நாயாறு பகுதியில் தனி ஒருவர் 40 படகுகள் வைத்து தொழில் செய்வதால் தமது தொழில் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் மத்திய மீன்பிடி அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சாவிடம் சுட்டிக்காட்டிய பகுதியில் உள்ள தமிழர்களது வாடிகளுக்கே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.

இதனால் வாடியில் இருந்த மீனவர்களது பல இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவ இடத்துக்கு வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனும் குறித்த பகுதி பிரதேச சபை உறுப்பினர் மற்றும் பொலிஸாரும் சென்று நிலைமைகளை பார்வையிட்டு வருகின்றனர். 

இதேவேளை இராணுவம் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை அணைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.