(க.கிஷாந்தன்)
மலையகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையில் அட்டன் மற்றும் நுவரெலியா பகுதிகளில் 46 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அந்தவைகயில் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட அட்டன் டிக்கோயா எட்லி தோட்டத்தில் 37 குடும்பங்களை சேர்ந்த 167 பேர் மண்சரிவு அபாயம் காரணமாக எட்லி தோட்ட தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக பாதுகாப்பு கருதி தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட நானுஓயா டெஸ்போட் கீழ்பிரிவு தோட்டத்தில் 13.08.2018 அன்று மாலை இடம்பெற்ற மண்சரிவு காரணமாக அத்தோட்டத்தின் 13ம் இலக்க தொடர் குடியிருப்பில் வாழும் 9 குடும்பங்களை சேர்ந்த 29 பேர் இடம்பெயர்ந்து எபஸ்போட் பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து இடைக்கிடையே பெய்து வரும் அடை மழை காரணமாக அம்பகமுவ, கொத்மலை, நுவரெலியா போன்ற பிரதேசங்களில் மண்சரிவுகள், வீதி விபத்துகள் என இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.
Post a Comment
Post a Comment