தலவாக்கலை - அட்டன் பிரதான வீதியில் மண்சரிவு




(க.கிஷாந்தன்)
கடந்த சில தினங்களாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடும் காற்றுடன் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 14.08.2018 அன்று முதல் தலவாக்கலை, லிந்துலை, டயகம, கொட்டகலை போன்ற பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருகிறது. இதனால் 15.08.2018 அன்று காலை 8 மணியளவில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை சென்.கிளாயர் பகுதியில் இடம் பொற்ற பாரிய மண்சரிவினால் குறித்த வீதியூடான போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இப்பிரதான வீதீயினூடாக சிறிய வாகனங்கள் மாத்திரமே ஒருவழியாக பயணித்தன. குறித்த மண்மேட்டை அகற்றும் பணிகளில் தலவாக்கலை பொலிஸார் ஈடுப்பட்டதுடன், பல மணித்தியாலங்களுக்கு பின் அட்டன் - நுவரெலியா ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.