கதிரைகள் கொள்வனவு திட்டம் இடைநிறுத்தம்




மேல் மாகாண சபைக்கு 640,000 ரூபா பெறுமதியுடைய கதிரைகளை கொள்வனவு செய்யும் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

மேல்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார இந்நடவடிக்கையை எடுத்துள்ளார். 

640,000 ரூபா பெறுமதியுடைய 125 கதிரைகளை பெல்ஜியமில் இருந்து கொள்வனவு செய்ய மேல் மாகாண சபை திட்டமிட்டிருந்தது.