புதிய தலைமைத்துவத்தின் கீழ் கிரிக்கெட்டை முன்னேற்றுவேன் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தமீர மன்ஜுவின் ´செல்லம்த செல்லம்´ என்ற நூல் வெளியீட்டு விழாவின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ´விளையாட்டைப் பற்றி அறிந்திருப்பது அவசியமான ஒன்றாகும். விளையாட்டுத்துறை அமைச்சு இளைய தலைமுறை மத்தியில் இதனை ஊக்குவிப்பு செய்ய வேண்டும்.
நான் கிரிக்கெட்டை பற்றி பேசவில்லை. என்னைவிட புதிய விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கிரிக்கெட் மற்றும் சட்டத்தை பற்றி நன்கு தெரியும். நான் பிரச்சினையை உருவாக்க விரும்பவில்லை. எனினும் புதிய தலைமைத்துவத்தின் கீழ் நான் கிரிக்கெட்டை முன்னேற்றுவேன். கிரிக்கெட்டை முன்னேற்றவும் கிரிக்கெட் துறையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் நான் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன். இதனால் வேறு ஒரு அரசியல் தலைமைத்துவம் இந்த கோரிக்கையை என்னிடம் முன்வைத்தால் அதனை நான் செய்வேன். என்னை கிரிக்கெட்டுக்கு வரவேண்டாம் என்று கூற யாருக்கும் உரிமை கிடையாது. இத்துறையில் எனக்கே அதிக பொறுப்பும் கடப்பாடும் உண்டு.
புதிய அரசியல் தலைமைத்துவம் கிரிக்கெட்டை பொறுப்பேற்று அதனைச் சீரமைக்கச் சொன்னால் அந்தப்பொறுப்பை ஏற்று ஒரு மாதகாலத்திற்குள் அதனை நான் செய்து முடிக்க தயாராகுவேன். இதனை நான் ஆசைக்காக கூறவில்லை. காரணம் என்னைவிட கிரிக்கெட்டில் அதிக உரிமை யாருக்கும் கிடையாது´ என்றார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும் 18 வருடகால விளையாட்டுச் செய்தி ஊடகவியலாளராக கடைமையாற்றும் தமீர மன்ஜு ´செல்லம்த செல்லம்´ என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment