உள்ளுராட்சி சபைகளின் செற்பாடுகளுக்கு பிரதேச செயலங்கள் தடையாக இருந்தால் பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றம் செல்வோம்




(க.கிஷாந்தன்)
உள்ளுராட்சி சபைகளின் செற்பாடுகளுக்கு பிரதேச செயலகங்கள் தடையாக இருந்தால் பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றம் செல்வோம் என அம்பகமுவ பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் 13.08.2018 அன்று எடுக்கபட்டது.

நுவரெலியா மாவட்டம் அம்பகமுவ பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் 13.08.2018 அன்று   ஒருகிணைப்பு குழு இணை தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாச மத்திய மாகாண சபை உறுப்பினர் கனபதி கனகராஜ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.


இவ் அபிவிருத்தி குழு கூட்டத்தில் பிரதேச செயலாளர், மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் பிரதேச சபைகளின் தலைவர்கள். திணைக்களங்களின் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உட்பட  அரச நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துக் கொண்டார்கள்.

இதன் போது அம்பகமுவ பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இந்த குழு கூட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தற்போது தெரிவாகியுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகளுக்கு பிரதேச செயலகங்கள் தடையாக இருந்து வருவதாக உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் அனைவரும் இன்று அபிவிருத்தி குழு கூட்டத்தில் குற்றம் சுமத்தினர்.

தற்போது உள்ளுராட்சி சபைகளினால் முன்னெடுக்கபடுகின்ற அபிவிருத்தி திட்டங்களையும் ஏனைய செயற்பாடுகளையும் பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகிறது. இதனால் உள்ளுராட்சி சபைகள் பெரும் சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது .இதனை தொடர்ந்து பிரதேச செயலகம் முன்னெடுக்குமனால் பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றம் சென்று நீதி கோரவுள்ளதாக உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்த அதே நேரம் குற்றமும் சுமத்தினர்.

இதற்கு ஒரு தீர்வாக ஒருகிணைப்பு குழு இணை தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாச, மத்திய மாகாண சபை உறுப்பினர் கனபதி கனகராஜ் ஆகியோர் இனைந்து இதற்கு பாராளுமன்றத்திலும் சம்பந்தபட்ட நிறுவனங்களிடமும் பேசி உரிய திர்வினை பெற்று கொடுப்பதாக கூறினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஒருகிணைப்பு குழு இணை தலைவர் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்,

நான் பிரதேச சபையின் தலைவராகவும், மாகாண அமைச்சராகவும் இருந்த வகையில் இந்த நாட்டிலே மாகாண சபைகளும் உள்ளுராட்சி சபைகளும் உருவாக்கபட்டது. அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதற்காகவே அது முறையாக இடம் பெறாமல் இருக்குமானால் அதற்கு நான் எதிர்ப்பினை தெரிவிக்கும் அதேநேரம் இது தொடர்பில் பாராளுமன்றத்திலும் பேச தயாராக இருக்கின்றேன். எனவே அதிகாரிகள் இது தொடர்பில் சிந்தித்து செயல்பட வேண்டும் என கூறினார்.

மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் அவர்கள்,

கடந்த மஸ்கெலியா பிரதேசசபை கூட்டத்தில் தமிழ்மொழி புறக்கனிப்பு ஏற்பட்டது தொடர்பில் குற்றம் சாட்டினார். காரணம் மஸ்கெலியா பிரதேசசபையின் அமர்வின் போது சபையின் அனைத்து ஆவனங்களும் தமிழ்மொழியில் வழங்காமைக்கு என தெரிவித்தார். இதன்போது இதற்கு சபை தலைவரும், செயலாளரும் மன்னிப்பு கோரிய அதேநேரம் எதிர்வரும் காலங்களில் தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் அவர்கள்,



அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பெருந்தோட்டங்களில் கானப்படும் பாதைகளை உரிய முறையில் மாகாண மற்றும் மத்திய அரசின் வீதி அபிவிருத்தி சபைகள் முறையாக செயற்படாமல், பேனாததாலும் பாடசாலை மாணவர்கள் உட்பட தொழிலாளர்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதற்கு உரிய அதிகார சபைகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என கேட்டு கொண்டார். இதற்கு பதில் வழங்கிய அதிகார சபைகளின் அதிகாரிகள் கூடிய விரைவில் தீர்வினை பெற்று கொடுப்பதாக கூறினார்கள்.