வைத்திய நிபுணர் இல்லாமையினால் கிண்ணியா மக்கள் அவதி





கிண்ணியா தள வைத்தியசாலையில்  கடமையாற்றிய  VP விஷேட வைத்திய நிபுணர்  மேற்படிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளமை காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு. கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மற்றும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் உட்பட அனைவரும்   மாற்று ஏற்பாடின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால்  தினமும் பல நோயாளிகள் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.


இதனால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.

இந்த நிலைமையினை கருத்திற் கொண்டு கிண்ணியா உலமா சபை, வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம், என்பவற்றின் அனுசரணையோடு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளரோடு
 தொடர்பு கொண்டு அருகில் உள்ள வைத்தியசாலை விஷேட வைத்திய நிபுணரை
இணைப்புச் செய்தல் தொடர்பாகவும்
உடனடியாக நிரந்தர  விஷேட வைத்திய நிபுணரை நியமித்தல் தொடர்பாகவும் கலந்துறையாடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.