அமெரிக்காவில் மெக்கானிக் ஒருவர், பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக விமானத்தை திருடிச்சென்று, சாகசத்தில் ஈடுபட்டபோது விழுந்து நொறுங்கியது.
அமெரிக்காவின் சியாட்டில் டகோமா நகரில் ஹாரிசன் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் #HorizonAir Q400 பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில், வேலை பார்த்து கொண்டிருந்த, 29 வயது மதிக்கத்தக்க மெக்கானிக் ஒருவர், விமானத்தை திருடி சென்றார்.
இதனையறிந்த அதிகாரிகள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். ராணுவ விமானங்களும், திருடப்பட்ட விமானத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டன. ஆனால், புக்கெட் பகுதியில் உள்ள சிறிய தீவு ஒன்றில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.
இதில், மெக்கானிக் உயிரிழந்தார். விமானத்தை இயக்க தெரியாத மெக்கானிக் சாகசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதே விமான விபத்திற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விமான கடத்தல் சம்பவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கு எந்த தொடர்புமில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment
Post a Comment