மகாத்மா காந்தி இந்தியாவுக்கு மட்டுமல்ல இலங்கையருக்கும் பொதுவானவர்




(க.கிஷாந்தன்)
இந்த நாட்டில் நாம் ஆட்சியை கைப்பற்றி மூன்று ஆண்டுகளே ஆகின்றது. இந்த நிலையில் நாடு பல கடன் சுமைகளை கொண்டு இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக கடன்களை அடைத்தாவது நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வோம். நாம் ஆட்சியை கைப்பற்றியது நாட்டில் வாழும் சாதாரண மக்களை உயர்நிலைக்கு கொண்டு செல்வதற்கும் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கும் அபிவிருத்தி முன்னேற்றத்தை முன்னெடுத்து செல்வதற்கும் ஆகும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்தியா அரசாங்கத்தின் நிதி உதவியின் ஊடாக பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி புரம் கிராமத்தை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,
மகாத்மா காந்தி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட காலத்தில் மலையக மக்கள் மீது விசேட கவனம் செலுத்தினார். அதன் நினைவாக இன்று மகாத்மா காந்தியின் பெயரால் டன்சினன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய வீடமைப்பு கிராமத்திற்கு பெயர் சூட்டப்பட்டள்ளது.
மகாத்மா காந்தி இந்தியாவுக்கு மட்டுமல்ல இலங்கையருக்கும் பொதுவானவர் இன்று தோட்ட மக்களுக்கு சொந்தமான நிலத்தில் தனி வீடு உள்ளது. அவ்வீட்டிற்கு தனியான சுத்தமான குடிநீர் திட்டமும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் ஏனைய மக்களை போல வாழக்கூடிய உண்மையான இலங்கையர்களாக உரிமை பெற்ற மக்களாக தோற்றம் பெற்றுள்ளார்கள். இந்த நாட்டில் அணைவருக்கும் கிராம என்ற மயம் அமைத்து கொடுக்கப்படும்.
அந்த வகையில் அணைத்து சமூகங்களும் கிராமங்களில் வாழ கூடிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் அதேவேளையில் பெருந்தோட்டப்பகுதிகளை கிராமமயமாக்குவதற்கு அமைச்சர் திகாம்பரத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும். சிலர் கிராமங்களை இல்லாதொழிக்க கம்பெரலிய எனும் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் நாம் கிராமங்கள் ஊடாக மக்களை அபிவிருத்தி அடைய முன்னேற்றகரமான கம்பெரலிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நெருங்கிய உறவு பாலம் இருப்பதால் இந்தியாவின் கலாச்சாரமும், இலங்கை கலாச்சாரமும் ஒன்றாக பேணப்படுகின்றது.
அந்தவகையில் இந்தியாவுக்கு சென்று சிவன் வழிபாடுகளை மேற்கொள்ள பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதேபோன்று இந்திய மக்கள் இராமயணத்தின் வழிபாடுகளை மேற்கொள்ள இப்பகுதிக்கு வரும் நிலையும் உருவாகியுள்ளது. அந்தவகையில் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றிகள் தெரிவிப்பதாக கூறினார்.
இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 60,000 வீடுகளை வழங்கியது. ஒரு தொகை வீடுகள் மலையகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஏனைய வீடுகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக இலங்கையில் இன குரோதங்கள் காணப்பட்டிருந்தது. ஆனால் இப்போது இல்லை. இன்று கொழும்பில் உள்ளவர்கள் யாழ்ப்பாணம் நைனாதீவுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். அதேபொன்று யாழில் உள்ளவர்க்ள கொழும்பை சுற்றிபாத்து நிம்மதியாக செல்கின்றனர்.
இவ்வாறாக இன மத பேதமின்றி தமிழர் சிங்களவர் மூஸ்லிம்கள் என்ற போதமற்று மக்கள் நிம்மதியாக இன்று வாழக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இந்திய அரசாங்கம் இலங்கை மக்களுக்கு வரப்பிரசாதமாக அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்ற அதேவேளையில் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தோட்ட மக்களுக்கும் ஏனைய மக்களுக்கும் வீடமைப்புகளை முன்னெடுப்போம் ஆலோசனை தெரிவித்தார். ஆனால் நான் கிராமங்களை உருவாக்குவோம் என ஆலோசனை தெரிவித்துள்ளேன். அதே நேரத்தில் மலையகத்தில் புதிய கிராமங்களை உருவாக்குவதற்கு பூரண ஒத்துழைப்பை அமைச்சர் திகாம்பரத்திற்கு வழங்குவேன்.
முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன நான் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் மலையக பாடசாலைகளுக்கு உதவ வேண்டும் என பணித்தார். அந்த வகையில் மலையகத்தின் அரசாங்க பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் வளங்களை எனது காலத்தில் வழங்கினேன். பின்னர் வாக்குரிமை பிராஜா உரிமை இவர்களுக்கு வழங்க வேணடும் என அவரட தெரிவித்த காலப்பகுதியில் தனி நாட்டு ராச்சியம் அமைக்க பிரபாகரன் தயாராகிய நிலையில் நாட்டின் அணைவருக்கும் ஒட்டு மொத்தமாக பிரஜா உரிமை வழங்கி இலங்கை என்ற உரிமையை ஜே.ஆர்.ஜெயவர்தன வழங்கினார்.
முன்னால் ஜனாதிபதி அமரர்.பிரமதாஸ அவர்களின் ஊடாக மலையக பிரதேசங்களில் ஆடை தொழிற்சாலைகள் பல அமைத்து இம்மக்களை அபிவிருத்தி பாதையில் வழிநடத்தினார். இப்போது நான் பிரதமராகி இம்மக்களுக்கு புதிய கிராமங்களை அமைத்து அபவிருத்தி பாதையில் முன்னெடுத்து செல்லும் அதேவேளை மேலும் உயர்தர கல்லூரிகள் பல உருவாக்குவதற்கும் திட்டங்கள் வகுப்பட்டுள்ளதுடன் குடிநீர் திட்டமும் தோட்ட பகுதிகளில் சுகாதாரத்திற்கான மாற்று திட்டங்களும் இன்று திறக்கப்பட்டுள்ள இந்த கிராமத்தில் பொருளாதாரத்தில் அபிவிருத்தி அடைய கடைகள் மற்றும் வாகன திருத்துமிடங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.


இன்று நாட்டில் தேசிய ஒற்றுமை காணப்படுவதுடன் நல்ல ஜனநாயகமும் காணப்படுவதாக அவர் தனதுரையில் அவர் மேலும் தெரிவித்தார்.