தபால் மா அதிபராக ரஞ்சித் ஆரியரத்ன




பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன புதிய தபால் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இன்றைய தினம் (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

முன்னதாக தபால் மா அதிபராக இருந்த ரோஹண அபேரத்ன ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.