திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் வணிக கல்வி பீடத்தின் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல்!
திருகோணமலைவளாகத்தின் தொடர்பாடல் மற்றும் வணிககல்விபீடத்தின்;, 1 ஆம் வருட (இரண்டாம் அரையாண்டு) மாணவர்களுக்கானகற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதியும் 3 ஆம் வருட மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதியும் ஆரம்பிக்கபடவுள்ளது.
இத்தினங்களில் அக்கல்வியாண்டிற்கான மாணவர்கள் பெற்றோர்களுடன் சமுகமளிக்குமாறு வளாக முதல்வர் கலாநிதி வ. கனகசிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை வளாகத்தின் இப்பீடத்தின் கல்வி ஆண்டிற்கான மாணவர்களின் சகல கல்வி நடவடிக்கைகளும் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் 4 ஆம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் கடந்த ஜூலை மாதம் 25 ஆம் திகதியும், 2 ஆம் வருட மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 14 ஆம் திகதியும் மீள ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment