(எம்.பஹ்த் ஜுனைட்)
ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தலுக்கு கண்டனம் தெறிவிக்கும் வகையிலும் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.சஜீ அவர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலை கண்டித்து காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், போதைக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோசம் எழுப்பியதுடன் பதாதைகளையும் ஏந்தி நின்றனர்.
ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலை கண்டித்து நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்,முஸ்லிம் ஊடகவியலாளர்கள், காத்தான்குடி நகர சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது கண்டனத்தை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment