140 ஆண்டுகால இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் புதிய முயற்சி




#லண்டன்: 
இங்கிலாந்து அணி 2018 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 21 வயதிற்குட்பட்ட 4 இளம் வீரர்களை டெஸ்ட் போட்டிகளில் களமிறக்கியுள்ளது. அதனை பற்றிய ஒரு சிறு தொகுப்பு. இங்கிலாந்து கிரிக்கெட் அணி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சுமார் 140 ஆண்டு காலம் விளையாடி வருகிறது. இதுவரை அந்த அணி 1000 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே அணி என்ற சாதனையையும் படைத்தது குறிப்பிடத்தக்கது. 

இவ்வளவு சிறப்பு மிக்க இங்கிலாந்து அணி 2018 ஆம் ஆண்டில் இதுவரை செய்யாத ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 21 வயதிற்கு உட்பட்ட 4 புதிய வீரர்களை டெஸ்ட் போட்டிகளில் களமிறக்கியுள்ளது. இதுவரை ஒரே ஆண்டில் இவ்வளவு இளம் வீரர்களை களமிறக்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியின் நம்பிக்கை இளம் வீரர்களின் திறமையின் மீது மட்டுமே என்பதை மட்டுமே இது வெளிப்படுத்துகிறது. 

இதற்கு முன்னதாக 2003 முதல் 2016 வரைக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அந்த அணி 21 வயதிற்குட்பட்ட நான்கு வீரர்களை அறிமுகம் செய்துள்ளது. ஜேம்ஸ் ஆண்டர்சன், லியாம் பிளங்கெட், ஸ்டீவன் பின் மற்றும் ஹசீப் அஹமத் ஆகியோர் அந்த நான்கு வீரர்கள். 

ஆனால் 2018 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 4 வீரர்கள் 31 வயதிற்கு உட்பட்டு களமிறக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் விவரம்
 மேசன் கிரேன் - 20 வருடம் 320 நாட்கள் 
டோம் பெஸ் - 20 வருடம் 306 நாட்கள் 
சாம் கர்ரன் - 19 வருடம் 363 நாட்கள் 
ஒல்லி போப் - 20 வருடம் 220 நாட்கள் 


ஒல்லி போப் தற்போது இந்திய அணிக்கு எதிராக 2 ஆவதை டெஸ்டில்,தனது டெஸ்ட் வாழ்க்கையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.