அக்கரைப்பற்றில்,போலியான வியாபாரக் குறியுடன் SURGICAL PLASTER விற்றவருக்கு, அபராதமும் ஒத்தி வைக்கப்பட்ட சிறையும்





#Irsaath.
புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழ் அனுமதி பெறாது, போலியான வியாபாரக் குறியினைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட மருத்துவ Plaster களை தன் உடமையில் வைத்திருந்து விற்பனை செய்தவருக்கு, அக்கரைப்பற்று, கௌரவ நீதிபதி திரு.பீற்றர் போல்,ரூபா 25 000/= தண்டப் பணத்தையும், 3 மாத சிறையையும் விதித்ததுடன், அதனை 10 வருடங்களுக்கு ஒத்தி வைத்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கானது, 2003ம் ஆண்டின் 36ம் இலக்க புலமைச் சொத்துச் சட்டத்தின் பிரிவுகள்,184,186(1).(2) இன் கீழ், அக்கரைப்பற்றுப் பொத்துவில் வீதியைச் சேர்ந்த சில்லறை விற்பனை நிலைய உரிமையாளர் (நைசர்) என்பவருக்கு எதிராக, அக்கரைப்பற்று நீதிமன்றில் தனியார் நிறுவனத்தினால், தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சந்தேக நபரின் சார்பில் இன்றை தினம், சட்டத்தரணிகள் எஸ்.எல்.ஏ றசீட், எம்.எம்.பஹீஜ்,எ.எச். சமீம் ஆகியோர் ஆஜராகினர். 

தமது கட்சிக்காரர்,குறித்த பொருளை உற்பத்தி செய்யவில்லையெனவும், தமது கடைக்கு கொண்டுவரப்பட்ட பொருளை நன்நோக்கத்துடன் வாங்கி விற்றதாகவும்,இது போலியாக பெருள் என்று தமது அறிந்திருக்காததையும் எடுத்தியம்பி  மன்றுரை செய்தனர். 

மேலும்,குறித்த பொருளை இதற்கு முன்னர்,தாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாங்கி விற்றிருக்கவில்லை என்றும், தமக்கு எதிராக எந்த வொரு சந்தரப்பத்திலும் இதற்கு முன்னர் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப் பட்டிருக்கவில்லை என்றும்.குறித்த குற்றச் சாட்டுக்கான குறைந்த பட்ச தண்டனையை வழங்குமாறும் வேண்டி, மன்றை மன்றாட்டமாகப் பிரார்தித்தனர்.

குறித்த பாதிக்கப்பட்ட நிறுவத்தின் சட்டத்தரணிகள், சந்தேக நபரின் சட்டத் தரணிகளினால் செய்யப்பட்ட சமர்ப்பணத்தை ஏற்றுக் கொள்வதுடன், குறித்த குற்றச் சாட்டின் (1) பிரிவனைத் தவிர்த்து, தண்டனை வழங்கவும் இணங்குவதாகத் தெரிவித்தனர். சந்தேக நபரைக் கைது செய்த அம்பாரை பொலிஸ் நிலைய அதிகாரிகளும் நீதிபதியின் முன்பாக மன்றுரை செய்தனர்.

சகல தரப்புக்களின் சமர்ப்பணத்தையும் ஆராய்ந்த அக்கரைப்பற்று கௌரவ நீதிபதி திரு. பீற்றர் போல், குற்றவாளிக்கு, ரூபா 25 000/= தண்டப் பணத்தை விதித்ததுடன், 3 மாத கால சிறைத் தண்டனையினையும் விதித்து, அச் சிறைச் தண்டனையை 10 வருடங்களுக்கும் ஒத்தி வைத்துத் தீர்ப்பளித்தார்.