அக்கரைப்பற்றின் மகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம், சிராஜ் மஷ்ஹுர்-NFGG கட்சியின் புதிய தவிசாளர்




#IsmailUvaizurRahman..

NFGG யின் புதிய தவிசாளராக  தெரிவு செய்யப்பட்டுள்ளார் சகோதரர் சிராஜ் மஷ்ஹுர்.

அக்கரைப்பற்றைப் பிறந்தகமாக் கொண்டவர். நற்பண்பு மிக்க பெரிய போடியாரின் குடும்ப வாரிசு.சன்மாரக்க போதகர்,மர்ஹீம் மசூர் மௌலவியின் புதல்வர். அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயம் ஆரம்பக் கல்வி. உயர் கல்வியோ கிழக்கின் முதலாவது தேசியக் கல்லுாரியான அக்கபை்பற்று முஸ்லிம் மத்திய கல்லுாரி. தென் கிழக்குப் பல்கலையின் முன்னாள் விரிவுரையாளர். முது தத்துவமானி. ”எதிர்பிலக்கியம் ஒரு கலாசார ஆயுதம்” என்னும் நுலையும் யாத்தவர்.கலை .இலக்கிய விளையாட்டுத் துறைகளில் நாட்டம்  கொண்டவர். நல்லதொரு திறனாய்வாளர். மீள்பார்வை பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர். அக்கரைப்பற்றினுடைய மற்றுமொரு பண்முக ஆளுமை அவர்.

சமூக சேவைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த சகோதரர் சிராஜ் மஷ்ஹுர், துாய்மையான அரசியல் கலாசாரமொன்றை, நல்லாட்சியொன்றை  நாட்டில் கட்டியெழுப்ப வேண்டுமென்பதற்காக தம்மை அர்ப்பணித்தவர்.2014 காலப் பகுதியில், பதிய தொரு அரசியல் கலாசாரமொன்றைக் கட்சியெழுப்புவதற்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக் கட்சியுடன் இணைந்து செயலாற்றியவர். 2018ல் அக்கரைப்ற்று மா நகர சபை தேர்தலில் போட்டியிட்டு பட்டியல் வேட்பாளராகி, தற்போது மாநகர சபையின் அங்கத்தவராகவும் பணிபுரிகின்றார்.

கடந்த 2018/6/30  சனியன்று, காத்தான்குடியில் இடம்பெற்ற NFGG பேராளர் மநாட்டில், அக்கட்சியில் புதிய தவிசாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாழ்த்துக்கள்!

எந்தவித ஆதரைவையும் இக் கட்சிக்கு கொடுக்காது, வெளியில் இருந்து இக் கட்சியினை அடியேன் திறனாய்வு செய்கின்றபோது,

முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கிடையில்,சுனாமி போன்று பிரவேசித்த NFGG அரசியல் கட்சி, பல பிரதேச,நகர,மாநகர,மாகா சபை உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டது. 
அரசியல் கட்சிகளின் தலைவர்களாகத் தெரிவு செய்யப்படுபவர்கள்.பின்னாட்களில்,ஆயுட் காலத் தலைவர்களாக தன்னை நிறுத்திக் கொண்ட வரலாறு அதிகம். மேலும், தலைரை விமர்சிக்கும் சாதரண அடி மட்ட அங்கத்தவர்கள், தலைவரைத் தட்டிக்  கேட்கும் நிறைவேற்று சபை உறுப்பினர்கள்கூட, நிறுத்தப்பட்ட வரலாறுகள் அதிகம். உட் கட்சிப் புசல்களால் உடைந்த கட்சிகளும் அதிகம். தலைவரை விமர்சித்ததால் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட அங்கத்தவர்கள் அல்லது தானாக விலகி புதியதொரு முஸ்லிம் கட்சிகளை உருவாக்கி அதில் வேரூன்றியவர்கள் சிலர், வீழ்ந்தோர்கள் பலர்.

அத்தகையை செயற்பாடுகளிலரிருந்து, அதிலிருந்து அன்னியப்பட்டார் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் NFGG கட்சியின் முன்னாள் தலைவர். இது ஒரு ஜனநாயகக் கட்சி, சர்வதிகாரம் என்பது இங்கு கிடையாது. எல்லா அங்கத்தவர்களும் தலைவர்களாகவும், தலைமைத்துவ சபையினால் தேர்ந் தெடுக்கப்படுகின்ற போது  என்ற அவர்களது கொள்கை ஒப்புறுதிப் படுத்தப்பட்டுள்ளதாகத் புலனாகிறது எனக்கு.

NFGG கட்சியின் புதிய  தவிசாளர் சிராஜ் மசூர், கடந்த கால களப் பணிகளை விட கண் எதிரே உள்ள பணி  கனதியானது. காத்திரமானது.அக்கரைப்பற்று மாநகர சபைக்குள்  அவர், முடங்கிக் கிடக்காது, வானமே எல்லையாக தொழிற்பட்டு அறிவியல் சார்பான சர்வதேச அரங்கின் பேராட்டத்துக்குள் தன்னைத் தள்ள வேண்டும். உலகளாவிய மாற்றத்தின்னுடாக முஸ்லிம் மக்களுக்கு கிடைக்கவிருக்கின்றவற்றை உள்ளீர்ப்புச் செய்தலும் வேண்டும்.

இலங்கை  முஸ்லிம்களின் இருப்பை தக்க வைப்பதற்கு, சர்வதேச அரங்கில் தமது அறிவையும் ஆளுமையையும் பயன்படுத்த வேண்டும்!. சர்வ தேச நாடுகளுடன் கை கோர்த்து, உள்நாட்டிலுள்ள, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றச் செயல்பட வேண்டும். தான் சார்ந்துள்ள கட்சி, தமக்காக உழைத்த ஆதரவாளர்களைத் தாண்டி, பாமரன் தொட்டு பண்டிதர் வரையில் நிழல் ஆலோசனைச் சபையை உடனடியாக நிறுவும் வேண்டும். அச் சபையின் ஆக்கபுர்வ விமர்சனங்களை அறிந்து செயல் படுகின்றபோது,மாற்றுக் கட்சிக் காரர்களின் கருத்துக்களை உள்ளீர்ப்புச் செய்து, தமது நடவடிக்கையை முன்னெடுக்கும் போது, இலங்கை முஸ்லிம் அரசியல் வராலாற்றில் நல்லதொரு தலைவராக மிளிரலாம் என்ற நம்பிக்கை கீற்று என்னுள் துளிர் விடுகிறது.


புதிய தவிசாளரும் அக் கட்சியும் வேர் விட்டு, விழுதுகள்விட  எமது வாழ்த்துக்கள்!