(NFGG நாவிதன்வெளி)
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் எம்.ஐ.எம். ஜஹானின் தனிப்பட்ட முயற்சியில் 14 குடும்பங்களுக்கு நீர் இணைப்பை பெற்றுக்கொள்வதற்கான உதவித் தொகை நேற்று வியாழன் (12.07.2018) மாலை வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் சிராஜ் மஷ்ஹுர், நாவிதன்வெளி பிரதேச சபையின் ந.தே.மு. உறுப்பினர் எம்.ஐ.எம். ஜஹான், ந.தே.மு. தலைமைத்துவ சபை உறுப்பினர் எம்.ஐ.எம். மஸீன், ந.தே.மு. அக்கரைப்பற்று நகர சபை உறுப்பினர் ஏ.எல்.எம். சாபூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய தவிசாளர் சிராஜ் மஷ்ஹுர், அரசியல் களத்தில் நல்ல பல மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை நிலவுகின்றது. ஊழல், மோசடி அற்ற வெளிப்படைத்தன்மை கொண்ட அரசியல்வாதிகள் களத்துக்கு வர வேண்டிய தேவை உள்ளது.
உங்களது பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம். ஜஹான் மிகுந்த உத்வேகத்துடனும், ஆர்வத்துடனும் களத்தில் செயற்பட்டு வருகிறார். அவரது முயற்சியினால் இன்று உங்களுக்கு நீர் இணைப்புக்களுக்கான பண உதவி வழங்கப்படுகின்றது. இனி வரும் காலங்களிலும் அவர் உங்கள் பிரதேசத்தின் அபிவிருத்திக்காகப் பணியாற்றுவார் – என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் அக்கரைப்பற்று நகர சபை உறுப்பினர் ஏ.எல்.எம். சாபூர், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம். ஜஹான் ஆகியோரும் உரையாற்றினர்.
Post a Comment
Post a Comment