GIT ; 94% மேற்பட்டோர் சித்தி




2017 ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரத்தில், தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளுள் 94 சதவீதத்திற்கு மேற்பட்டோர் சித்தி அடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

2017 ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி இந்த பரீட்சையின் பெறுபேறுகளே இவ்வாறு நேற்று (17) வௌியிடப்பட்டன. 

158,805 பரீட்சார்த்திகள் இந்த பரீட்சைக்கு தோற்றிய நிலையில், இவர்களுள் 150,005 பேர் சித்தியடைந்துள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இப்பரீட்சை முடிவுகளை www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக மாணவர்கள் அறிந்து தெரிந்து கொள்ள முடியும்.