#FIFA2018 உலக உதைபந்தாட்ட முக்கிய தருணங்கள்




உலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: பிரான்ஸ் அணி குரேஷியாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
படத்தின் காப்புரிமை
உலகக்கோப்பை கால்பந்து இறுதியாட்டம் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்துவருகிறது. பிரான்ஸ் அணி அரை இறுதியில் பெல்ஜியத்தையும், குரேஷியா இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தன.
இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆட்டம் துவங்கியது. மாஸ்கோவின் லுஜ்நிகி விளையாட்டரங்கில் நடந்து இப்போட்டியில் ஆரம்பம் முதலே குரோஷியா ஆக்ரோஷமாக விளையாடியது. எனினும் இறுதியில் பிரான்ஸ் வென்றது.
குரேஷிய வீரர் லூகா மோட்ரிக் மற்றும் பிரான்ஸ் வீரர் கிலியன் ம்பாப்பிபடத்தின் காப்புரிமைCATHERINE IVILL
Image captionகுரேஷிய வீரர் லூகா மோட்ரிக் மற்றும் பிரான்ஸ் வீரர் கிலியன் ம்பாப்பி
உலக கோப்பை தொடரில் யாருக்கு என்ன விருது ?
  • இங்கிலாந்து அணித்தலைவர் ஹேரி கேன் இந்த உலககோப்பை தொடரின் தங்க ஷூவை வென்றார்.
  • இத்தொடரின் சிறந்த வீரருக்கான தங்க பந்தை குரேஷிய வீரர் லூகா மோட்ரிக் வென்றார்
  • பெல்ஜியம் நடுகள வீரர் ஈடன் ஹஜார்டு இரண்டாவது சிறந்த வீரராகவும் மற்றும் பிரான்ஸின் ஆன்டாய்னி கிரீஜ்மென் மூன்றாவது சிறந்த வீரராகவும் தேர்ந்தெடுப்பட்டனர்.
  • பிரான்ஸ் வீரர் கிலியன் ம்பாப்பி சிறந்த இளம் வீரர் விருதை வென்றார்.
  • பெல்ஜியம் வீரர் திபாவுட் கோர்டியோஸ் முன்னணி கோல் கீப்பராக விளங்கியதால் கோல்டன் குளொவ் விருதை ஜெயித்தார்.
  • 1986 -க்கு பிறகு உலக கோப்பை தொடரில் கோல்டன் ஷூ விருது வெல்லும் முதல் இங்கிலாந்து வீரர் ஆனார் கேன்.
முதல் பாதியில் என்ன நடந்தது?
பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் ம்பாப்பி ஆட்டத்தின் தொடக்க சில நிமிடங்களில் பந்தை தவறவிட்டுக்கொண்டிருந்தார்.
உலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டி:படத்தின் காப்புரிமை
சொந்த அணிக்கு எதிராக கோல் போட்ட மரியோ மண்ட்ஜூகிக்.
ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது. பிரான்ஸ் வீரர் ஆன்டோன் கிரீஜ்மன் அட்டகாசமாக பந்தை உதைத்தார். அந்த பந்தை தலையில் முட்டி தடுப்பதற்காக எம்பினார் குரோஷியா வீரர் மரியோ மண்ட்ஜூகிக். ஆனால் பந்து அவர் தலையில் பட்டு இன்னும் எம்பி கோல் கீப்பரின் கையில் தஞ்சம் அடையாமல் குரேஷியாவின் வலையில் விழுந்தது .
இதையடுத்து உலககோப்பை இறுதி போட்டியில் 1-0 என்ற முன்னிலையுடன் விளையாடத்துவங்கியது பிரான்ஸ்.
ஆனால் விரைவிலேயே குரோஷியா ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தது. ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் பெரிசிச் இடது காலால் ஒரு கோல் அடித்தார்.
குரோஷியா வீரர் பெரிசிச்படத்தின் காப்புரிம
குரோஷிய வீரர்கள் இந்த உலக கோப்பையில் நாக் அவுட் போட்டிகளில் தொடர்ந்து ஆட்டத்தில் பின்தங்குவதும் பின்னர் மீண்டு வந்து வெற்றி பெறுவதுமாக இருந்தனர். டென்மார்க் அணிக்கு எதிராக ரவுண்ட் ஆஃப் 16, ரஷ்ய அணிக்கு எதிராக காலிறுதி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக இறுதி போட்டிகளில் முதல் கோல் எதிரணி அடித்திருந்தாலும் மீண்டும் வந்து வென்றது குரேஷியா.
ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஆன்டோனி கிரீஜ்மன் ஒரு கோல் அடித்தார். பத்தே நிமிட இடைவெளியில் மீண்டும் முன்னிலை பெற்றது பிரான்ஸ் அணி.
உலக கோப்பை மற்றும் ஈரோ கோப்பை ஆகியவற்றில் பத்து நாக் அவுட் போட்டிகளில் 12 கோல்களை தானாக அடிக்கவோ அல்லது இன்னொரு வீரர் அடிக்கவோ உதவியுள்ளார் ஆன்டோனி கிரீஜ்மன். கடந்த ஐம்பது ஆண்டுகளில் பிரான்ஸ் வீரர் ஒருவர் நாக்அவுட் போட்டிகளில் செய்த மிகப்பெரிய சாதனை இது. முன்னதாக ஜினடின் ஜிடேன் எட்டு கோல்களை அடித்ததே பிரான்ஸ் வீரர் ஒருவரின் சாதனையாக இருந்தது.
முதல் பாதி முடிவில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
உலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டிபடத்தின் காப்புரிமை
இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் பால் போக்பா அடித்த கோலால் பிரான்ஸ் 3-1 என முன்னிலை பெற்றது.
குரோஷியா அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் பிரான்ஸ் வீரர் கிலியன் ம்பாப்பி கிட்டத்தட்ட 22 யார்டு தூரத்தில் இருந்து கோல் அடிக்கவே பிரான்ஸ் 4-1 என மிகப்பெரிய முன்னிலை பெற்றது. குரேஷியா கோல் கீப்பரால் கோல் மழை தனது வலையில் பொழிவதை பார்க்க மட்டுமே முடிந்தது.
வெற்றி கொண்டாட்டத்தில் பிரான்ஸ் வீரர்கள்படத்தின் காப்புரிமைIAN MACNICOL
Image captionவெற்றி கொண்டாட்டத்தில் பிரான்ஸ் வீரர்கள்
தொடர்ச்சியாக கோல் வாங்கிக் கொண்டிருந்தாலும் குரேஷியா தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடியது. ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் மரியோ மண்ட்ஜூகிக் ஒரு கோல் அடிக்க குரேஷியாவின் நிலை 2- 4 என்றானது.
உலககோப்பை கால்பந்து மற்றும் ஈரோ கோப்பை/சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியில் கோல் அடித்த ஐந்தாவது வீரர் ஆனார் மரியோ மண்ட்ஜூகிக்.
முன்னதாக ஃபெரன்க் புஸ்கஸ், ஜோல்டன், முல்லர், ஜினடின் ஜிடேன் இந்த சாதனையைச் செய்திருந்தனர்.
போட்டி முடிவில் பிரான்ஸ் 4-2 என்ற கணக்கில் வென்றது.