சீரற்ற காலநிலையால்,




(க.கிஷாந்தன்)
தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்ட பகுதியில் பாரிய மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் குறித்த பகுதியினூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்ததாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
16.07.2018 அன்று மதியம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.
எனினும் அப்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அதன்பின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.