இலங்கை அணிக்கு எதிராக தென்னாபிரிக்கா பெற்ற குறைந்த ஓட்டங்கள் பதிவு
இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 278 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
352 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாம் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 73 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இவ்வோட்டமானது, தென்னாபிரிக்க அணி இலங்கையுடன் பெற்ற மிகக் குறைந்த ஓட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸிற்காக தென்னாபிரிக்க அணி பெற்ற 126 ஓட்டங்களானது இலங்கை அணிக்கு எதிராக அவ்வணி பெற்ற இரண்டாவது குறைந்த ஓட்டங்களாகும்.
இதற்கு முன்னர் கடந்த 2011 இல் டேர்பனில் இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் பெற்ற 168 ஓட்டங்களானது அவ்வணி இலங்கைக்கு எதிராக பெற்ற மிகக் குறைந்த ஓட்டங்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி சார்பில் முதல் இன்னிங்ஸில் 158 ஓட்டங்களையும், இரண்டாம் இன்னிங்ஸில் 60 ஓட்டங்களையும் பெற்ற, திமுத் கருணாரத்ன போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
இப்போட்டியின் இரு இன்னிங்ஸிலும், தில்ருவன் பெரேரோ 10 (4 + 6) விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இரு அணிகளுக்கிடையிலான இரு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி மூன்று நாட்களில் நிறைவடைந்துள்ளதோடு, இப்போட்டியை வென்ற இலங்கை அணி 1 - 0 என தொடரில் முன்னிலை வகிக்கின்றது.
இத்தொடரின் இரண்டாவது போட்டி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) கொழும்பில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அது தவிர, 5 ஒரு நாள் மற்றும் ஒரு ரி20 போட்டியிலும் இரு அணிகளும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதல் இன்னிங்ஸ்
இலங்கை 287/10
திமுத் கருணாரத்ன 158 (222)
தனுஷ்க குணதிலக 26 (31)
இலங்கை 287/10
திமுத் கருணாரத்ன 158 (222)
தனுஷ்க குணதிலக 26 (31)
ககிசோ ரபடா 4/50
தப்ரைஸ் ஷம்சி 3/91
தப்ரைஸ் ஷம்சி 3/91
தென்னாபிரிக்கா 126/10
பப் டு பிளசிஸ் 49 (88)
வேணொன் பிளந்தர் 18 (86)
பப் டு பிளசிஸ் 49 (88)
வேணொன் பிளந்தர் 18 (86)
தில்ருவன் பெரேரா 4/46
சுரங்க லக்மால் 3/21
சுரங்க லக்மால் 3/21
இரண்டாம் இன்னிங்ஸ்
இலங்கை 190/10
திமுத் கருணாரத்ன 60 (80)
அஞ்சலோ மெத்திவ்ஸ் 35 (86)
சுரங்க லக்மால் 33* (46)
இலங்கை 190/10
திமுத் கருணாரத்ன 60 (80)
அஞ்சலோ மெத்திவ்ஸ் 35 (86)
சுரங்க லக்மால் 33* (46)
கேசவ் மஹராஜ் 4/58
ககிசோ ரபடா 3/44
ககிசோ ரபடா 3/44
தென்னாபிரிக்கா 73/10
வேணொன் பிளந்தர் 22* (38)
ஏய்டன் மார்க்ரம் 19 (46)
குயின்டன் டி கொக் 10 (09)
வேணொன் பிளந்தர் 22* (38)
ஏய்டன் மார்க்ரம் 19 (46)
குயின்டன் டி கொக் 10 (09)
தில்ருவன் பெரேரோ 6/32
ரங்கன ஹேரத் 3/38
ரங்கன ஹேரத் 3/38
ஆட்ட நாயகன்: திமுத் கருணாரத்ன
1st Test - SLvSA: தென்னாபிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 352
இலங்கை பந்துவீச்சில் தடுமாறும் தென்னாபிரிக்கா
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்க அணிக்கு 352 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்றைய (14) மூன்றாம் நாள் ஆட்டத்தை 4 விக்கெட்டுகளுக்கு 111 ஓட்டங்கள் என ஆரம்பித்த இலங்கை அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 158 ஓட்டங்களை பெற்ற திமுத் கருணாரத்ன, அரைச் சதத்தை பூர்த்தி செய்து, 60 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.
அஞ்சலோ மெத்திவ்ஸ் 35 ஓட்டங்களையும், அணியின் தலைவர் சுரங்க லக்மால் ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் கேசவ் மஹராஜ் 4 விக்கெட்டுகளையும், ககிசோ ரபடா 3 விக்கெட்டுகளையும் கைப்பறினர்.
ஏற்கனவே தனது முதல் இன்னிங்ஸில் 287 ஓட்டங்களை பெற்ற இலங்கை அணி, தென்னாபிரிக்க அணியை விட 161 ஓட்டங்கள் முன்னலை வகிக்கும் நிலையில், இரண்டாம் இன்னிங்ஸிற்காக 190 ஓட்டங்களை பெற்றதன் மூலம், தென்னாபிரிக்க அணிக்கு 352 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
அந்த வகையில் தனது இரண்டாம் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்க அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 40 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.
அவ்வணி, ஏற்கனவே தனது முதல் இன்னிங்ஸிற்காக 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணிக்கு சாதகமாக காணப்படும் இப்போட் இன்றைய மூன்றாம் நாளுடன் நிறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முதல் இன்னிங்ஸ்
இலங்கை 287/10
திமுத் கருணாரத்ன 158 (222)
தனுஷ்க குணதிலக 26 (31)
இலங்கை 287/10
திமுத் கருணாரத்ன 158 (222)
தனுஷ்க குணதிலக 26 (31)
கசிசோ ரபடா 4/50
தப்ரைஸ் ஷம்சி 3/91
தப்ரைஸ் ஷம்சி 3/91
தென்னாபிரிக்கா 126/10
பப் டு பிளசிஸ் 49 (88)
வேணொன் பிளந்தர் 18 (86)
பப் டு பிளசிஸ் 49 (88)
வேணொன் பிளந்தர் 18 (86)
தில்ருவன் பெரேரா 4/46
சுரங்க லக்மால் 3/21
சுரங்க லக்மால் 3/21
இரண்டாம் இன்னிங்ஸ்
இலங்கை 190/10
திமுத் கருணாரத்ன 60 (80)
அஞ்சலோ மெத்திவ்ஸ் 35 (86)
சுரங்க லக்மால் 33* (46)
இலங்கை 190/10
திமுத் கருணாரத்ன 60 (80)
அஞ்சலோ மெத்திவ்ஸ் 35 (86)
சுரங்க லக்மால் 33* (46)
கேசவ் மஹராஜ் 4/58
ககிசோ ரபடா 3/44
ககிசோ ரபடா 3/44
தென்னாபிரிக்கா 73/10
வேணொன் பிளந்தர் 22* (38)
ஏய்டன் மார்க்ரம் 19 (46)
குயின்டன் டி கொக் 10 (09)
வேணொன் பிளந்தர் 22* (38)
ஏய்டன் மார்க்ரம் 19 (46)
குயின்டன் டி கொக் 10 (09)
தில்ருவன் பெரேரோ 6/32
ரங்கன ஹேரத் 3/38
ரங்கன ஹேரத் 3/38
ஆட்ட நாயகன்: திமுத் கருணாரத்ன
Post a Comment
Post a Comment