கையளிப்பு




மட்டக்களப்பு மாவட்டத்தில், நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்காக 550 வீட்டுத்திட்டங்கள், ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வருகிறன.
இத்திட்டத்தின் கீழ், போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நவகிரி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய முன்மாதிரி வீடுகளை, பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு, பிரதேச செயலாளர் செல்வி ஆர்.ராகுலநாயகி தலைமையில், நேற்று முன்தினம் (14) நடைபெற்றது.
இதில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 23 வீடுகள், மிகவும் பாதிக்கப்பட்ட, வீடு இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.