(அப்துல்சலாம் யாசீம்)
கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட இடிமன் மற்றும் கற்குழி பகுதிகளில் திருட்டுத்தனமாக மின்சாரம் பெற்ற இரண்டு பேருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும்
இலங்கை மின்சார சபைக்குரிய 133843 ரூபாய் பணத்தை அடுத்த தவணைக்கு வர முன்னர் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று (திங்கள்கிழமை) உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் யானைகள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் சட்ட விரோதமான முறையில் திருட்டு தனமாக மின்சாரம் பெற்ப்பட்டு வருவதாக கொழும்பிலுள்ள இலங்கை மின்சார சபையின் இரகசிய பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா இடிமன் பகுதியில் மின்சாரம் வழங்கப்பட்டிருந்த நிலையில் சட்ட விரோதமான முறையில் மின் இணைப்பை பெற்ற குற்ச்சாட்டிற்காக இலங்கை மின்சார சபைக்குறிய தொன்னூற்றாராயிரத்தி ஜந்நூற்றி பத்து ரூபாய் பணத்தை நஷ்டயீடாக செலுத்துமாறும் நீதிமன்றத்திற்கு பத்தாயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும் அதே வேளை கற்குழி பகுதியில் திருட்டு தனமாக மின்சாரம் பெற்றவருக்கு 37333 ரூபாய் பணத்தை மின்சார சபைக்கு நஷ்டயீடாக வழங்குமாறும் நீதிமன்றத்திற்கு பத்தாயிரம் ரூபாயினை செலுத்துமாறும் நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.
திருட்டு தனமாக மின்சாரம் பெறுவது குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது இலங்கை மின்சார சபைக்கோ அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபையின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
Post a Comment
Post a Comment