ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் கடுமையான காற்று வீசி வருகின்றது.கச்சான் காற்று எனப்படும் இக்காற்று காரணமாக வீடுகளில் நடப்பட்ட வாழை மற்றும் பழ மரங்கள் முறிந்து விழுந்து நாசமாகியுள்ளன.
வருடாந்தம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கிழக்கில் இக்காற்று வீசுவது வழமை.இக்காற்றுடன் கடும் உஸ்ணமான காலநிலையும் நிலவுவதால் இரவு வேளைகளில் குழந்தைகள் முதியவர்கள் கடும் இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.
இக்காற்றினால் மட்டக்களப்பு வாவியில் மீன்பிடி நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.தோணிகளை வாவியினுள் செலுத்த கடுமையான காற்று இடமளிக்காமையினால் மீனவர்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுள்ளனர்.
கச்சான் காற்று காரணமாக பல ஓலைக்குடிசைகளும் சேதடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment