கருத்தாடல்




(அப்துல்சலாம் யாசீம்)

உல்லாச பிரயாணத்துறையினால் சகல மாகாணங்களினதும் உல்லாச பிரயாண அபிவிருத்தியின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கும் அதன் அபிவிருத்தியினை ஒருங்கிணைப்பதற்கான கலந்துரையாடல் நேற்றிரவு வௌ்ளிக்கிழமை திருகோணமலையில் டொக்டர்  ஞானசேகரம் தலைமையில் இடம் பெற்றது.

இதில் உல்லாச பிரயாண அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான அமைச்சர் ஜோன் செனவிரெட்ண மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம ஆகியோரின் பங்கு பற்றளுடன் இடம் பெற்றது.

திருகோணமலை உப்பவௌியிலுள்ள ஜெகப் ஹோட்டலில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அனைத்து மாகாணங்களைச்சேர்ந்த உல்லாசத்துறையைச்சேர்ந்த உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதில் ஆரம்பகட்டமாக கிழக்கு மாகாண சுற்றுலாஅபிவிருத்தியில் அது தொடர்பிலான திறன்களை விருத்தி செய்தல் மற்றும் உல்லாச பிரயாண வர்த்தக நிறுவனங்களை பதிவு செய்தல் போன்ற செயற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித கோகொல்லாகம சுற்றுலா அபிவிருத்தியில் கிழக்கு மாகாணம் பாரிய வளங்களை கொண்டிருப்பதாகவும் அதன் உற்ச பயன்பாட்டின் மூலம் இப்பிரதேச பொருளாதாரத்தை எய்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.


இந்நிகழ்வில் அவுஸ்திரேலியா உதவியுடன் நடாத்தப்படும் சுற்றுலா அபிவிருத்தி திட்டம் தொடர்பான விளக்கத்தினையும் அவுஸ்திரேலியா சுற்றுலா ஆசோசகர் பஸ்கோல் கெவோடா தௌிவுபடுத்தியதும் குறிப்பிடத்தக்கது.