தயாசிறி பதவி பெற்றுக் கொள்ளவில்லை




தயாசிறி ஜயசேகர ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் பதவி பெற்றுக் கொண்டதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால கூறியுள்ளார். 

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார். 

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய 16 உறுப்பினர்கள் குழு இரண்டு பக்கங்களிலும் செயற்படுவதில்லை என்றும், ஆளும் கட்சியுடன் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

16 பேர் குழுவில் சிரேஷ்ட உப தலைவர்கள் 03 பேர் இருப்பதாகவும், அவர்கள் எவரும் இதுவரை தமது பதவிகளில் இருந்து விலகவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.