முஸ்லிம் ஆசிரியர்,இராமாயணத்தை உருதுவில் மொழி பெயர்த்தார்




#India.
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் ஆசிரியை மகி தலாத் சித்திக். இவர், இதுவரை 7 புத்தங்களை எழுதி வெளியிட்டுள்ளார். 

இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஒருவர் இராமாயணம் புத்தகத்தை பரிசாக அளித்தார். மேலும், இஸ்லாமிய மக்கள் இராமாயணத்தை பற்றி எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக உருதுவில் மொழிபெயர்க்க வேண்டும் என மகி தலாத்திடம் அவரது நண்பர் கோரிக்கை வைத்துள்ளார். 

இந்நிலையில், இரண்டு வருடங்கள் செலவிட்டு இராமாயணத்தை மகி தலாத் உருதுவில் மொழிபெயர்த்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ´எனக்கு அனைத்து மதங்களின் புனித நூல்களையும் பிடிக்கும். மத ரீதியாக ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்துவதற்காக இராமாயணத்தை உருதுவில் மொழி பெயர்க்க தொடங்கினேன்.´ என அவர் தெரிவித்தார்.