பிரான்ஸ் - பெல்ஜியம் மோதல், இறுதி போட்டியில் நுழையப்போவது யார்?





#IsmailUvaizurRahman
கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்கியது. இதில் 32 அணிகள் பங்கேற்ற நிலையில்,
தற்போது இந்தத் தொடரானது அரை இறுதி ஆட்டத்தை எட்டியுள்ளது.

இதையடுத்து இறுதிப்போட்டியில் நுழையப்போவது யார் என்பதை தீர்மானக்கும் அரையிறுதி போட்டிகள் (செவ்வாய்க்கிழமை) துவங்குகிறது. அதன்படி முதல்
அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - பெல்ஜியம் என இரு ஐரோப்பா அணிகள் பலப்பரீட்சை செய்கிறது.

பிரான்ஸ் அணியை பொறுத்த வரையில் நடந்த மூன்று லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 2-1, பெரு அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. 
மேலும் டென்மார்க் அணயிடம் டிரா செய்து குரூப் பட்டியலில் முதலிடம
 பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.


இதையெடுத்து பிரான்ஸ் அணி நாக் அவுட் சுற்றில் பலம் வாய்ந்த 
அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில்
 இரு அணிகளும் கோல் மழை பொழிந்தது.  அதில் பிரான்ஸ் அணி 4-3 என 
கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கால் இறுதிக்கு கால்பதித்தது.



இதைத்தொடர்ந்து நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மற்றொரு
 தென் அமெரிக்கா நாட்டை சேர்ந்த உருகுவே அணியுடன் மோதியது.
 இதில் சிறப்பாக விளையாடிய பிரான்ஸ் அணி 2-0, என உருகுவே 
அணியை எளிதில் வென்று 12 ஆண்டுகளுக்கு பின் அரை இறுதி 
போட்டிக்கு நுழைந்துள்ளது.

மறுமுனையில் பெல்ஜியம் அணியை எடுத்துக்கொண்டால் இந்த தொடரில்
 சிறந்த ஃபாரமில் உள்ளது.

முதல் கட்டமாக நடந்த அனைத்து லீக் ஆட்டத்திலும் பெல்ஜியம் அணி 
எதிரணியை துவம்சம் செய்தது. பனமாவை 3-0 , துனிசியா அணியை 5-2 மற்றும் இங்கிலாந்து அணியை 1-0 என எளிதில் வென்று பட்டியலில் முதலிடத்தை
 பெற்று நாக் அவுட் சுற்றுக்கு நுழைந்தது.

இதைத்தொடர்ந்து நடந்த நாக் அவுட் சுற்றில் தொடக்கத்தில் இரண்டு கோல்
பின்தங்கிய நிலையில் இருந்தும் , ஜப்பான் அணியை எதிர் நீச்சலடித்து
3-2 என கோல் வித்தியாசத்தில் திரில் வெற்றி அடைந்தது.

இதையடுத்து கால் இறுதி சுற்றில் பெல்ஜியம் அணி, ஜாம்பவான் அணியான 
பிரேசிலை எதிர்கொண்டது. இதில் சிறப்பாக விளையாடிய பெல்ஜியம் 2-1 என
கோல் கணக்கில் பிரேசில் அணியை தோற்கடித்தது. இதன் மூலம் 32 ஆண்டுகளுக்கு பின்னர் அரை இறுதிக்கு அடியெடுத்து வைத்ததுள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் - பெல்ஜியம் என இரு அணிகளிலும் அனுபவம் வாய்ந்த
இளம் வீரர்கள் படையே உள்ளதால்,  போட்டியில் எதிர்பாராத பல திருப்பங்களுடன் நிகழும் என கால்பந்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இரண்டாவது அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோத உள்ளன.