(க.கிஷாந்தன்)
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நோர்வூட் பிரதான வீதியிலிருந்து நோர்வூட் அயரபி தோட்டத்திற்கு உட்செல்லும் வீதியில் கால்வாய் ஒன்றில் லொறி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் 08.07.2018 அன்று ஞாயிற்றுகிழமை மதியம் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டிட வேலைப்பாட்டுக்கு இரும்பு கம்பிகள் மற்றும் சீமெந்து ஆகிய பொருட்களை எற்றி சென்ற லொறி வீதியில் முன்நோக்கி செல்லும் போது லொறியின் தடுப்புக்கட்டை செயழிழந்ததன் காரணமாக பின்நோக்கி சென்று குறித்த கால்வாயில் கவிழ்ந்துள்ளது.
விபத்தின் போது, லொறியின் சாரதிக்கும், உதவியாளருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லையெனவும், லொறிக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment