உலக வனாந்தர வார மாநாட்டில்




ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (16) இத்தாலியின் ரோம் நகரில் 6 ஆவது உலக வனாந்தர வார மாநாட்டில் உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார். 

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், உலக வனப்பாதுகாப்புக் குழுவின் 24 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சனிக்கிழமை இத்தாலியின் ரோம் நகருக்கு பயணமாகினார். 

நிலைபேறான அபிவிருத்தி இலக்கை அடைவதற்கு வனாந்தரத்தின் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடிய பங்களிப்பைக் கண்டறிவதாகும் என்பதே இம்முறை மாநாட்டின் தொனிப்பொருளாகும். 

இந்த சர்வதேச மாநாடு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.