இலங்கையின் தேசிய விமான சேவையான, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவைகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய சுமார் 14 பில்லியன் ரூபாவில், குறைந்த பட்சமாக 1 பில்லியன் ரூபாவை உடனடியாக எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்பு செலுத்த வேண்டும் என அக்கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அவ்வாறு செலுத்தப்படாவிட்டால், எதிர்வரும் புதன் கிழமையுடன் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கி வரும எரிபொருள் விநியோகத்தை நிறுத்தப்போவதாகவும் எச்சரித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இந்த முடிவுக்கு, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளதோடு, இந்த முடிவினால், விமான சேவைகள் நிறுத்தப்படும் ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
(TM)
Post a Comment
Post a Comment