(க.கிஷாந்தன்)
மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக “பசும் பொன்”என்ற வீடமைப்பு திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 90 வீடுகள் 08.07.2018 அன்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.
மஸ்கெலியா மானெலி, ஓமிடல், பிரவுண்லோ, மவுஸ்ஸாக்கலை வெவ்வேறு தோட்டங்களில் அமைக்கப்பட்ட 90 வீடுளே பயனாளிகளுக்கு வைபவரீதியாக கையளிக்கப்பட்டது.
குறித்த தோட்டப்பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வீடு வசதி அற்றவர்களுக்கு இந்த 90 வீடுகள் குறித்த அமைச்சின் 9 கோடி ரூபா செலவில் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மஸ்கெலியா மானெலி தோட்டத்தில் 25 வீடுகளும், ட்ரஸ்ப்பி ஓமிடல் தோட்டத்தில் 25 வீடுகளும், மஸ்கெலியா பிரவுண்லோ மற்றும் மவுஸ்ஸாக்கலை ஆகிய தோட்டங்களில் 40 வீடுகளுமாக மொத்தமாக 90 தனி வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கெளரவ பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் 08.07.2018 அன்று கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
ஒரு வீட்டில் 2 அறைகள், விராந்தை, குளியலறை மற்றும் மலசலகூடம் என இந்த புதிய வீடுகள் பயனாளிகளின் வசதிக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வீடுகளை திறந்து கையளிக்கும் நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு, ஆர்.ராஜாராம் அமைச்சின் இணைப்பு செயலாளர் ஜீ.நகுலேஸ்வரன், ட்ரஸ்ட் நிறுவனத்தலைவர் புத்திரசிகாமணி என பலரும் கலந்து கொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததோடு, வீடுகளையும் திறந்து வைத்தனர்.
Post a Comment
Post a Comment