மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில்




(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா விமான நிலையத்திற்கு அருகில் இன்று (09) மோட்டார் சைக்கிள் இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.


படுகாயமடைந்த இரண்டு பேரையும் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் மேலதிக சிகிச்சைக்காக ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் கிண்ணியா ,மாஞ்சோலைச்சேனை பகுதியைச்சேர்ந்த கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தில் தகவல் தொழிநுட்ப பிரிவில் உதவிக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றும் இல்யாஸ் முஸவ்பில் (48வயது) மற்றும் இலங்கை போக்குவரத்து சபை  கிண்ணியா டிப்போவில் கடமையாற்றும் ஏ.ஆர்.நசுறுல்லாஹ் (39வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் உதவிக்கல்வி பணிப்பாளரை மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பவுள்ளதாகவும் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பாக சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.