மின்சாரம் தாக்கி வயோதிபர் மரணம்




(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை சேறுநுவர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட 
மகிந்த புர சந்தியில் இன்று (01) காலை மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்வாறு உயிழிழந்தவர் சேறுநுவர ,காவன்திஸ்ஸபுர இலக்கம் 310 இல் வசித்து வரும் எச்.ஜீ.சோமசிறி (65வயது) எனவும் தெரியவருகின்றது.


சடலம் சேறுநுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை சேறுநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.