(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றினுள் அனுமதியின்றி உள் நுழைந்து பாலியல் சேட்டை செய்த சிவில் பாதுகாப்பு உத்தியோத்தரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மொறவெவ பொலிஸ் பிரிவிலுள்ள தெவனிபியவர பகுதியிலே இச்சம்பவம் நேற்றிரவு (12) இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் முதியன்சலாகே விமல் (43வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் பெண்னொருவர் தனிமையாக இருந்த போது இரவு நேரத்தில் அனுமதியின்றி வீட்டுக்குள் நுழைந்து பாலியல் சேட்டை செய்ததாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து விரைந்த பொலிஸார் இவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜந்து பிள்ளைகளின் தந்தையான இவரை இன்று வௌ்ளிக்கிழமை திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவரை 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
Post a Comment
Post a Comment