ரங்கன ஹேரத் ஓய்வுபெறுகின்றார்?




இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரின் பின்னர் நவம்பர் மாதமளவில் டெஸ்ட்போட்டிகளில் இருந்து நான் ஓய்வுபெறும் வாய்ப்புகள் உள்ளன என இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.
இவ்வருட இறுதியில் இடம்பெறும் இங்கிலாந்திற்கு  எதிரான தொடரே எனது இறுதி தொடராக அமையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடர் முடிவடைந்து மூன்று மாதங்களின் பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடர் உள்ளது  நான் அதுவரையே திட்டமிட்டுள்ளேன் என ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
ஓவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஓய்வெடுக்கவேண்டிய நேரம் வரும் எனக்கு அவ்வாறானதொரு நேரம் வந்துவிட்டது என நான் கருதுகின்றேன் என ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
என்னால் முடிந்தளவிற்கு விளையாட முடிந்தது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன், தென்னாபிரிக்க தொடரின் பின்னர் அணித்தலைவர் பயிற்றுவிப்பாளருடன் நான் பேசி எனது எதிர்காலம் குறித்து முடிவெடுப்பேன் என ஹேரத் தெரிவித்துள்ளார்.