தோட்ட தொழிலாளர்களுக்காக செய்துக் கொள்ளப்பட்ட கடந்த கால கூட்டு ஒப்பந்தத்தை அமைச்சர் பழனி திகாம்பரம் காட்டிக் கொடுத்தார் என்று கூட்டணி அமைத்து குறை கூறும் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவுக்கு தோட்டத்தை பற்றி என்ன தெரியும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவுக்கு மூளையில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இவர் அங்கொடை மனநோயாளி வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியோடு மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு ஊடாக பெருந்தோட்ட பகுதி மக்களுக்கு கட்டிக்கொடுக்கப்படும் வீடுகளில் இன்று (15) 155 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா இடம்பெற்றது.
இதில் முதலாவதாக அக்கரப்பத்தனை வெவர்லி தோட்டம் போட்மோர் பிரிவில் 80 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் இரண்டு வருடங்களுக்கு முன் செய்துக் கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தை திகாம்பரம் தான் காட்டிக் கொடுத்தார் என இ.தொ.காவுடன் கூட்டணி சேர்ந்துக் கொண்டு எம்மீது சேறு பூசுகின்றனர்.
நான் ஒரு காலமும் தொழிலாளர்களை காட்டிக் கொடுக்க போவதில்லை. காட்டிக் கொடுக்க மாட்டேன். இம்முறை ஆயிரம் ரூபாய்க்கு மேலதிகமாக சம்பளத்தை பெற்றுக் கொடுப்பவர்கள் என்றால் அவர்களை மாலை இட்டு வரவேற்கும் அதேவேளை இம்முறையும் தொழிலாளர்களை காட்டிக் கொடுப்பார்கள் என்றால் தொழிலாளர் தேசிய சங்கம் அதன் அங்கத்தவர்களை இணைத்துக் கொண்டு வீதியில் இறங்கி போராடுவதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா ஒரு காட்டிக் கொடுத்தவர். முன்னால் ஜனாதிபதி சந்திரிக்காவிடம் இருந்த போது மஹிந்த ராஜபக்ஷவை காட்டிக்கொடுத்தவர் மஹிந்தவிடம் இருக்கும் பொழுது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையையும் காட்டிக் கொடுத்தார்.
அதேபோன்று மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்துக் கொண்டு மஹிந்த ராஜபக்ஷவை காட்டிக் கொடுக்கும் இவர் எவர் எவரையோ 2020 இல் பிரதமராக்குவோம் என ஒருவர் ஒருவரை காட்டிக் கொடுத்து வருகின்றார்.
ஆனால் நான் சொல்லுகிறேன். 2020இல் முன்னாள் அமைச்சர் என்ற பதவியை கூட இழப்பார் என்று ரோகித்த அபேவர்தன அமைச்சர் சொல்லுவதை போல் இவர் தேசிய பட்டியல் ஆசனத்தையும் இழப்பார். ஆனால் 2020 இல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராகவே தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை உறுதியாக தெரிவிக்கின்றேன்.
கடந்த கால கூட்டு ஒப்பந்தத்தின் போது 1000 ரூபாவை சம்பளமாக வாங்கி தருவதாக தம்பட்டம் அடித்தவர்கள் கடைசியில் காட்டிக்கொடுத்து விட்டு முழு பொறுப்பையும் என் மீது தினித்து விட்டார்கள்.
காட்டி கொடுத்ததை யார் என்று மக்கள் நன்கு அறிவார்கள். நான் உங்களின் ஒருவன் இந்தியாவிலிருந்து பிறந்து வரவில்லை. மடக்கும்புர தோட்டத்தில் லயத்தில் பிறந்து தொழிலாளியின் பிள்ளையாக அரசியல் செய்கின்றேன். நான் தொழிலாளர்களின் கஷ்ட, நஷ்டங்கள் நன்கு அறிந்தவன்.
நான் ஒரு காலமும் தொழிலாளர்களை காட்டிக் கொடுத்தவன் அல்ல. என்னால் முடிந்ததை முழுமையாக செய்து முடிப்பேன். மக்களின் சந்தாவிலோ அல்லது ஒதுக்கப்படும் நிதியிலோ சுகபோக வாழ்க்கை வாழ்பவனும் அல்ல.
யார் எதை சொன்னாலும் என்னுடைய வேலையை செய்துக் கொண்டிருக்கின்றேன் என தெரிவித்த அமைச்சர் இந்திய அரசாங்கம் முன்னால் அல்லாதவாறு எம்மக்கள் மீது கருணை காட்டி வீடுகள், பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் என உதவி செய்கின்றார்கள்.
இந்த நிலையில் இந்திய பிரதமர் மேற்கொண்ட இலங்கை விஜயத்தின் போது எமது சமூகத்திற்கு வழங்கிய பத்தாயிரம் வீடுகளுகளான காணிகளையும் எமது அமைச்சு தற்பொழுது பெற்றுள்ளது.
அதேவேளை இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் டன்சினன் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள இந்திய வீடமைப்பு திட்டமும் அடுத்த மாதம் விசேட வைபவங்களுடன் திறந்து வைக்கப்படவுள்ளது.
வெவர்லி தோட்ட மக்களுக்கு கட்டப்படும் 80 வீடுகள் கட்டியமைக்கும் பணியில் சிரமதான பணிகளையும் மக்கள் செய்ய முன்வர வேண்டும் என தெரிவித்த அமைச்சர் ஒரு மனிதனுக்கு காணி வீடு சொந்தமாகின்றதோ அப்போதே சுதந்திரம் கிடைத்த நாளாக எண்ண வேண்டும்.
அந்த சுதந்திரம் நாம் முன்னெடுக்கும் சட்ட ரீதியான காணி உறுதி பத்திரம் மூலம் இப்பொழுது கிடைத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
(மலையக நிருபர் கிரிஷாந்தன்)

Post a Comment
Post a Comment