திருமலையில் தொண்டர் ஆசிரியர்கள்




(அப்துல்சலாம் யாசீம்)

கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்கள் நானூற்றி ஜம்பத்தாறு பேருக்கும் நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்குமாறு  கோரி இன்று (திங்கள்கிழமை)   திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர்  அலுவலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாணத்தில் யுத்த காலத்தின் போது ஒரு ரூபாய் பணம் கூட பெறாமல் பாடசாலைகளுக்கு சென்று கல்வியை கற்பித்து வந்ததாகவும்  தாங்கள் ஆசிரியர்கள் தொழிலுக்கு பொருத்தமானவர்கள் என  நேர்முகப்பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்டு மூன்று மாத காலமாகியும் இன்னும் நிரந்தர நியமனம் வழங்கவில்லையெனவும் குறிப்பிடுகின்றனர்.

கிழக்கு மாகாண உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்நிலையில் எப்போது நிரந்தர நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படவில்லையெனவும் தங்களளுக்கு நிரந்த நியமனத்தினை பெற்றுத்தர கிழக்கு ஆளுநர் கூடிய கவனம் எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்துடன்  இவ்வார்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் நியமனம் வழங்கும் திகதியை அறிவிக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவிக்கின்றனர்.