அட்டன் போடைஸ் பகுதியில்,மண்சரிவினால்




(க.கிஷாந்தன்)
அட்டன் போடைஸ் பிரதான வீதியில் என்.சி பகுதியில் 11.07.2018 அன்று காலை 7.00 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் போது போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த வீதியில் 10.07.2018 அன்று மாலை பாரிய கற்கள் புரள்வினால் வீதியில் வெடிப்புக்கள் ஏற்பட்டன. அதனை தொடர்ந்து 10.07.2018 அன்று இரவு முதல் இப்பகுதிக்கு பெய்து வரும் மழை காரணமாக வெடிப்புக்கள் ஏற்பட்ட பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த மண்சரிவு காரணமாக போடைஸ் மன்ராசி, அக்கரபத்தனை டயகம ஆகிய பகுதிகளுக்கு பொது போக்குவரத்து பாதிப்பக்குள்ளகியுள்ளன.
குறித்த பிரதேசங்களுக்கு செல்பவர்கள் மாற்று பாதைககளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது இந்த வீதியில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மாத்திரம் போகக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.