(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை தம்பலகமம் பிரதேச குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச குழுவின் இணைத்தலைவர்களான கே.துரைரெட்னசி ங்கம், புஞ்சிநிலமே ., அப்துல்லாஹ் மகரூப் ஆகிய பாராளுமன்ற அங்கத்தவர்களின் தலைமையில் வியாழக்கிழமை (12) காலை 9.30 மணிக்கு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது .
இக்கூட்டத்தில் சகல திணைக்களத் தலைவர்கள்,பிரதேசசபை தவிசாளர் ,திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள். இராணுவ அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பாராளமன்ற உறுப்பினர் கே.துரைரெட்ணசிங்கம் உரையாற்றும் போது புதிதாக தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களை வரவேற்றுப் பேசியதோடு அபிவிருத்தி நடவடிக்கைகள் பாரபட்சமின்றி சகல இன மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தி இருந்தார்.
அத்துடன் தொடர்ந்து பேசுகையில் தம்பலகமம் –கிண்ணியா வீதி அபிவிருத்தியின்போது வீதியோரத்திலிருந்த தனியார் காணிகள் பல நஷ்டஈடு வழங்கப்படுமென்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுவீகரிக்கப்பட்டன. பல வருடங்கள் கடந்த நிலையில் பல போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டும் இதுவரை பலருக்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை. எனவே அவர்களுக்குரிய நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். .
Post a Comment
Post a Comment