மாங்குளம் வீதியில்




முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு பயணிகளை ஏற்றிவந்த பேருந்து ஒன்று முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் கூழாமுறிப்புக்கும் முள்ளியவளைக்கும் இடைப்பட்ட பகுதியில் வீதியருகில் இருந்த மரத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது எனத் தெரிவிக்கப்பட்டது.
பேருந்தின் சில்லில் காற்று போனமையாலேயே இந்த விபத்து இடம்பெற்றது.
பேருந்து கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.