கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை




(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை  உப்புவௌி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் தனது தாயின் இரண்டாவது கணவரை கத்தியால் வெட்டி கொலை செய்த கொலை குற்றவாளிக்கு இன்று (03) திருகோணமலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்ட்டவர் திருகோணமலை.ஆண்டாங்குளம் பகுதியைச்சேர்ந்த ஏ.எச்.சமீர லக்மால் (38வயது) எனவும் தெரியவருகின்றது 


திருகோணமலை உப்புவௌி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ஆண்டாங்குளம் பகுதியில் கடந்த 2011ம் ஜனவரி மாதம் 11ம் திகதி தனது தாயாரின் இரண்டாவது கணவரை கத்தியால் வெட்டி கொலை செய்த குற்றசாட்டின் வழக்கு விசாரணை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொலை குற்றம் புரிந்ததாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்ட போதே  திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்.