மலையக பிரதேசத்தில் சில பாடசாலைகள் வழமை போல்




(க.கிஷாந்தன்)
கல்வி துறையை முடக்குவதற்கு 04.07.2018 அன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் மலையக பிரதேசத்தில் சில பாடசாலைகள் வழமை போல் இயங்குவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
அரசியல் பழிவாங்கல் என்ற ரீதியில் தகுதியற்ற 1200 பேருக்கு கல்வி துறையில் பதவி உயர்வுகள் வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளமைக்கு எதிராக நாடாளவீய ரீதியில் 04.07.2018 அன்று பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளை ஒரு நாள் முடக்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை ஆசிரியர் சங்கம் மேற்கொண்டிருந்தது.
இந்த நிலையில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இன்றைய தினத்தில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முடக்கிவிடக்கூடாது எனவும், வழமை போல் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் தெரிவித்திருந்தார்.
அதற்கமைவாக ஏனைய பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பணிபகிஷ்கரிப்புகள் இடம்பெற்று வந்தாலும், நுவரெலியா மாவட்டத்தில் சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை குறைந்து காணப்பட்டது. ஏனைய சில பாடசாலைகள் வழமை போல் இயங்குவதை காணக்கூடியதாக இருந்தது.


மாணவர்கள், ஆசிரியர்கள் என வழமையாக பாடசாலைக்கு 04.07.2018 அன்று சென்றுள்ளமையும், கல்வி நடவடிக்கைகள் வழமை போல் முன்னெடுப்பதையும் காணக்கூடியதாக உள்ளதென்பது குறிப்பிடதக்கது.