சிறுத்தை விவகாரம்: பத்து பேரும் பிணையில் விடுதலை





கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றின்மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 
குறித்த வழக்கை எடுத்துக்கொண்ட கிளிநொச்சி நீதவான் சந்தேகநபர்கள் 10 பேரையும்  தலா ஐந்தாயிரம் ரூபா காசு பிணையிலும் இரண்டு லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் விடுதலை செய்ய  உத்தரவிட்டுள்ளது.