குழந்தைக்கு மதுபானம் வழங்கியோர், கைது




சமூக வலைத்தளங்களில் வெளியான சிறிய குழந்தைக்கு மதுபானம் கொடுக்கும் விதமான காணொளி தொடர்பில் குறித்த குழந்தையின் தந்தை உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இந்த காணொளி தொடர்பில் உடனடியாக செயற்பட்ட மீகலாவ பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர். 

மீகலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணன்கமுவ பகுதியில் உள்ள வீட்டிலேயே குறித்த சம்பவம் கடந்த 14 திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த காணொளியில் 1 வருடமும் 1 மாதமுமான வயதுடைய குழந்தைக்கே மதுபானம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (16) குழந்தையை அநுராதபுரம் நீதிமன்ற வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குழந்தையை கொடுமை படுத்திய குற்றம் தொடர்பில் குழந்தையின் தந்தை உட்பட மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.