நீதிமன்றினுள் கேரளக் கஞ்சாவுடன் இளைஞர்




(அப்து்சலாம் யாசீம்)

திருகோணமலை நீதிமன்றத்திற்குள்   கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற இளைஞனொருவரை  இன்று (12)  நீதிமன்ற பொலிஸார் கைது செய்து துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகின்றது.

 இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா குறிஞ்சாங்கேணி பகுதியைச்சேர்ந்த பாரூக் முகம்மட் இம்றாஸ் (21வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை நீதிமன்றத்திற்கு வழக்கிற்கு வருகை தந்திருந்த இளைஞரொருவர் மூன்று தடவைக்கு மேல் நீதிமன்றத்திற்கு உள்ளே சென்று வந்த ​வேளை சந்தேகம் கொண்ட பொலிஸார் அவரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து 700மில்லி கிரேம் கேரளா கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை துறைமுக பொலிஸில் தடுத்து வைத்துள்ளதுடன் நாளைய தினம் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும்  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.