(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை ஹொரவ்பொத்தானை பிரதான வீதி நொச்சிக்குளம் பகுதியில் மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற லொறியொன்று
இன்று (13) காலை விபத்துக்குள்ளானது.
சீமெந்து தொழில் சாலைக்கு கீல் சீறியா என்றழைக்கப்டும் குற்றிகளை ஏற்றிச்சென்ற லொறியின் முன் டயருக்கு காற்று போனதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த விபத்தின் காரணமாக லொறி நடுவீதியில் புரண்டு கிடந்தமையினால் இரண்டு மணித்தியாலங்கள் வரை வீதி தடைப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
விபத்து தொடர்பில் மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment