பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர் பிரச்சினைகளுக்கு புதிய அமைச்சரவை




(அப்துல்சலாம் யாசீம் )

பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்களுக்குறிய நியமனம் வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் கூறுவதாக நாடாளமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண தொண்டராசிரியர்களின் பிரச்சினைகள்,அவர்களுக்கான நியமனம் வழங்குதல் என்பவை தொடர்பில் ஆளுநர் ரோஹித போகொல்லாகம நாடாளமன்ற உறுப்பினர் மற்றும் பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்களுக்கிடையில் சந்திப்பொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்று வௌ்ளிக்கிழமை நடை பெற்றது.

அச்சந்திப்பின் போதே கிழக்கு மாகாண ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் யுத்த காலங்களில் கடமையாற்றிய தொண்டராசிரியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.



இதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்குறிய தனியான அமைச்சரவை பத்திரமொன்றினை உடனடியாக சமர்ப்பித்து அனுமதியை பெற்று வந்தால் மிக விரைவில் நியமனங்களை வழங்க முடியுமென தெரிவித்த ஆளுநர் கிழக்கு மாகாணத்தில் அதிகளவிலாள தொழில் வாய்ப்புக்களை வழங்குவதையே தான் விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.