கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், மூத்த அரசியல்வாதியுமான, வேலனை வேணியன் இன்று காலமானர்.
மாரடைப்பு காரணமாக அவர் தனது 80வது வயதில் இன்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று தடவைகள் கொழும்பு மாநகர சபை உறுப்பினராக செயற்பட்டுள்ள வேலனை வேணியன், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராக இருந்துள்ளார்.
அத்துடன், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவராகவும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணை உப தலைவராகவும் வேலனை வேணியன் பதவி வகித்தார்.
இதேவேளை, ஜனநாயக மக்கள் முன்னணியியிலிருந்து அண்மையில் விலகிய வேலனை வேணியன் நவோதயா மக்கள் முன்னணியுடன் இணைந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment