-எஸ்.நிதர்ஷன்
வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தால், வவுனியாவில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்தின் 500ஆவது நாளை முன்னிட்டு, காணாமற்போனோரின் உறவினர்கள், நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்கு முன்னால் இன்று (07) உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை 9 மணியிளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்போராட்டம் மாலை நான்கு மணிவரை நடைபெறவுள்ளது.
வுவுனியாவில் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போராட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் 500ஆவது நாளை எட்டவுள்ளதை முன்னிட்டே, இன்று யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன்போது, நல்லூர் கந்தன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளுடன் 108 தேங்காய் உடைக்கப்படவுள்ளதுடன், 50 தீச்சட்டிகளும் எடுக்கப்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காணாமற் போனோரின் உறவிறனர்கள், நல்லூரில் முன்னெடுத்து வருகின்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
Post a Comment
Post a Comment